நாம் அந்த பிரிவினரல்ல: இலங்கையில் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக

உங்களது பெயரை குறிப்பிட்டு வன்முறைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.

என்ன நடந்தது?
ஒரு வாரத்திற்கு முன்பு தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதி இனமலுவே சுமங்கள தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் குழு உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள வன்முறைக் கும்பலொன்று தம்புள்ளயில் அமைந்துள்ள மசூதியொன்றை தாக்கி அழிக்க முன்வந்தது. அவ்வேளை இந்த மசூதி சட்டவிரோதமானது என குற்றம்சாட்டு எழுப்பப்பட்டது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையானது என்பது தெளிவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகிய, இதுவரை யூ டியுப்  ஊடாக உலகமே காணக்கூடிய வகையில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் காட்டப்படுகின்றன வன்முறை மற்றும் அதன் தன்மையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சில பிக்குகள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கை கால்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகள் பிரயோகித்து சத்தமிடுவதும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இன்னுமொரு பிக்கு பள்ளிவாசலின் முன்னால் நின்றவாறு தனது ஆடையை நீக்கிவிட்டு உடலின் மேல் காண்பித்தவாறு சத்தமிடுகின்றார். இந்த அடாவடியான வன்முறை நடவடிக்கையை சிரமதானம் என தெரிவிக்கும் வண. இனமலுவே சுமங்க தேரர், பள்ளிவாசலை இடித்துத்தள்ள அரசு உதவவேண்டும் என கூறும் காட்சியும் வீடியோ காட்சியில் உள்ளது.

புத்த பிக்குகள் மற்றும் வன்முறையாளர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர். அத்துடன், பள்ளிவாசல் மற்றும் இந்து கோவில் தொடர்பாக வண. இனமலுவே சுமங்கள தேரர், ஏனைய பிக்குகள் அவிழித்துவிட்ட இழிவான, இனவாத வார்த்தைப் பிரயோகங்களை வீடியோ ஊடாக பார்ப்பவர்களுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் சிங்கள பௌத்த மேலாதிக்க பேஸ் புக் குழுக்களில் இணைந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிகவும் பயங்கரமானவையாகும்.

இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கழிந்தும் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பிரதான ஊடகங்களினால் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. கருத்துக்கள் தெளிவாக கேட்காத வீடியோக்கள் தொடர்பாக வண. இனமலுவே சுமங்கள தேரர் பி.பி.ஸி. ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் வீடியோக் காட்சிகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார். நகைப்புக்குரிய விடயம் என்னவெனில், இந்த சம்பவம் தொடர்பான தெளிவான, விளக்கமான வீடியோ காட்சிகள் தேரரின் ஊடக பிரிவினால் நடத்தப்படும் இணையதளத்திலேயே வெளிவந்துள்ளதாகும். ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்டிருந்த அறிக்கையில் “சிறு தவறு நேர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கை பல்சமய, பல் இன மக்களைக் கொண்ட நாடாகும். அத்துடன், அரசமைப்பினதும் மற்றும் அரசின் கொள்கைக்கிணங்க நீண்டகாலமாக நாட்டினுள் இருந்துவரும் சம்பிரதாயங்களைக் கௌரவிக்கும் முகமாக இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் வாழு;ந்துவருகிறது” என அந்த அறிக்கையில் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளைவு என்ன?
தம்புள்ள சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோப் பதிவுகள் ஆகியன உலகம் முழுவதும் பரவியுள்ளன. அவற்றை அழிக்க முடியாது. ஒரு சிறு பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கும் முஸ்லிம் கவுன்ஸில் உட்பட அமைப்புக்கள், இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையாக, அமைதியாக, புத்திசாதுர்யத்துடன் செயற்படவேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தக் கருத்தையே சில தனிநபர்களும் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவத்தினால் கோபமடைந்துள்ள முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட நேரிடலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்டத் தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், சிறு சம்பவம்தானே என்ற நிலையில் மேலோட்டமாக ஆராய்ந்து தற்காலிக தீர்வொன்றை வழங்கினால் இந்த வன்முறை மிக்க மத மேலாதிக்கவாதம் குறுகிய காலத்துக்குள் நாடு பூராகவும் பரவிவிடும் ஆபத்து உள்ளது. இது யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளுக்கு பாரிய சவாலாக இருக்கும். தம்புள்ளயில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி சிங்கள பௌத்த மற்றும் முஸ்லிம் மேலாதிக்கவாதிகள் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்த முயற்சி செய்வர். அவ்வாறு இடம்பெறுமானால் சமூகங்களிடையே அச்சம், பாதுகாப்பற்ற தன்மை மேலோங்க இடமுள்ளது.

எங்களால் என்ன செய்ய முடியும்?
தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதியால் தலைமைதாங்கப்பட்ட பிக்குகள் குழு மற்றும் வன்முறைக் கும்பல் செயற்பட்ட விதம், தகாத வார்த்தைப் பிரயோகம் ஆகியன புத்தர் போதித்துள்ள தர்மங்களுக்கு மாறானதாகும். பௌத்த தர்மத்தின் படி பௌத்த துறவியொருவரின் நடத்தை தர்மங்களிலிருந்து இந்த பிக்குகளின் செயற்பாடு முற்றிலும் முரணாக காணப்பட்டது. சிறு குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வெட்கப்படக்கூடிய இந்த நடவடிக்கைக்காக கவலை தெரிவித்து பலர் இணையதளம் ஊடாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இலங்கை ஊடகங்களும் இந்தச் செய்திக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துவருகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது எம்மிடம் வாய்ப்பொன்று உள்ளது. ஆனால், நேரம் விரைவாக கடந்து செல்கிறது. உங்களுடைய பெயர், நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை ஆங்கிலத்தில், தமிழில், சிங்களத்தில் பதிவுசெய்யுங்கள். சிறு பிரிவினரின் அடாவடித்தனத்திற்கு, இனவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். கீழே உங்களது பெயரை குறிப்பிட்டு வன்முறைகளை கட்டவிழ்ப்போருக்கு அடிப்படைவாத, மேலாதிக்கவாத சிந்தனையுடன் செயற்படுவோருக்கு எதிர்ப்பை தெரியப்படுத்துங்கள்.

முற்றாக அழித்துவிடவேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் என நீங்கள் எண்ணும் விடயங்களுக்காகப் நாங்கள் இணைந்து போராடுவோம். அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.

இங்கு உங்களது பெயரைக் குறிப்பிடுங்கள். ஏனையோருக்கும் இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.

இதன் மூலம் என்ன இடம்பெறும்?
ஒரு மாதத்திற்குப் பின்னர் அனைவரது பெயர் மற்றும் அவர்கள் பதிவு செய்த கருத்துக்களை அச்சிட்டு ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பௌத்த மத சாசன அமைச்சகம் மற்றும் பௌத்த மதம் தொடர்பான திணைக்களம், கிறிஸ்தவ மதம் தொடர்பான திணைக்களம், இந்து மதம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் மதம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.

How to sign up?

Join hundreds of others by adding your name as a comment to this blog post. This is the preferred mode of input, and scrolling through the other comments can help to frame your own thoughts. For those who find this difficult, send us your comment and name using the form below, which we will as quickly as possible, add to the site. As a final resort, you can always email the comment to editors@groundviews.org. Bear in mind however that human resources curating this site are limited, so it may take a while for your comment to appear. Please bear with us.

This campaign ran from 27 April to 31 May 2012. More details here.

Advertisements

About Sanjana

An Ashoka, Rotary World Peace and TED Fellow, I have since 2002 explored and advocated the use of Information and Communications Technologies (ICTs) to strengthen peace, reconciliation,human rights & democratic governance. I founded and for eleven years curated the award winning Groundviews, Sri Lanka's first citizen journalism website. I specialise in, advise and train on new media literacy, web activism, digital security and online advocacy in Sri Lanka and internationally. With the UN and other actors, through the ICT4Peace Foundation, I also work extensively on the advancement of information management during crises, both sudden-onset as well as protracted. For well over a decade, I have trained digital security for activists and journalists in South Asia, South East Asia, Europe and the Balkans and focus on using a wide spectrum technology to capture, disseminate and archive vital stories in austere, violent human rights contexts. I am currently pursuing doctoral studies at the University of Otago, New Zealand on social media and politics.

35 responses to “நாம் அந்த பிரிவினரல்ல: இலங்கையில் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக

 1. Human being

  The Monks who attacked the Mosque should be arrested and punished in order to not to repeat the same. Not only that they have
  taken the authority in their hand against to other race but also, violated and exceeded the law of Constitution of a social republic democratic country…

  http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_02_Amd.html

 2. rezamohideen

  islam means peace.we muslims never forget our first srilankan mother either buddhist or a hindhu.since i am a theologist i could proove that buddha has mentioned about onness of god and our prophet.we all should become united.thanks

 3. Abdul RaheemMohamed Rifaadh

  Majority of sinhalese buddhist are not in favour with the incident. this is certainly done by some extremist perheps may be some politicians too. what we have to do is observe fasting & pray then ask duwa from the lord of universe &day of judgement Allha Allha !!!!!!!!!!!!!!.not going for violation & misleading actions

 4. rajany

  we all should be come in a one boat, then only we can show our strenth to who wanted to see. no silent, no silent, no silent. get to one shot and work

 5. Mohamed Nuski

  தயவ செய்து எங்களை வாழவிடுங்கள் ஒரு தாய் பிள்ளையாக..

  தயவு செய்து எங்களை வாழவிடுங்கள்.. எங்களுக்கும் உங்களுடைய மத இன வெறியை கற்பிக்காதீர்கள்..

  இந்த உலகத்தில் எத்தனையோ விடயங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். ஏங்களுக்கு எல்லாத்தாகுதியும் வழமும் இருந்தும் நாங்கள் ஏன் இப்பொழுதும் எங்களை இன்னொரு நாட்டிடம் கையெந்த(பிச்சை எடுக்க)வைக்கின்றீர்கள்.

  நீங்கள் மதத்தலைவர்கள் நீங்கள்தான் எங்களுக்கு சமாதானமான சுமூகமான மனிதனேயத்தை கற்பிக்கவோண்டும். உங்களை பின்பற்றித்தான் நாங்கள் வாழவேண்டும்.

  தயவ செய்து எங்களை வாழவிடுங்கள்.

 6. A.S.M.NIZAM

  stop vailans agains to muslim

 7. M.B.M.Firthous Naleemi

  i agree with document

 8. Thenmozhy Kugamourthy

  strongly condemned the attack

 9. Arafath Mohamed

  we need to get a action by our politicians in parliament.
  we need remind always thees like cases.
  but our guys they will forget after 2 month later.
  we have to remind always to be a perfect Muslim.

 10. எஸ். ராஜசேகர்

  தம்புள்ளை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் இந்து மக்களின் கோவில் அப்புறப்படுத்தும் முயற்சிக்கு இன மத பேதமின்றி எமது கண்டனத்தை முன்வைப்போம்.

  எந்த ஒரு மனிதனுக்கும் மதம் சார்ந்த உரிமைகள் இருக்கின்றன. அவன் எந்த மதத்திலும் சார்ந்திருக்கலாம். ஆனால், அவன் மீது அவன் சார்ந்திராத இன்னொரு மதத்தை வலிந்து திணித்தல் ஆகாது. இலங்கையின் இப்போதைய சூழ்நிலை இவ்வாறே காணப்படுகின்றது. வடக்கில் தமிழர் நிலப்பகுதிகளில் புதிது புதிதாக விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டப்படுகின்றன. பெரும்பான்மை சிங்கள மக்கள் வசிக்காத இப்பகுதிகளில் எதற்காக இவைகள்?

  கிட்டத்தட்ட 62 வருடங்கள் பழமைவாய்ந்த தம்புள்ள பள்ளிவாசல் மதத் தீவிரவாதிகளால் அழித்தொழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இனியும் மேற்கொள்ளப்படக்கூடும். இந்த நடவடிக்கைக்கு அரச உயர்மட்டத்திலிருந்து முறையான தீர்வு வழங்கப்படாததால் எதிர்காலத்தில் இனக்கலவரமொன்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

  யுத்தம் முடிவுற்று 3 வருடங்கள் நெருங்குகின்ற நிலையில் இனங்களுக்கிடையே ‘நல்லிணக்கம்’ என்ற ஒன்றை ஏற்படுத்த அரசு முன்வரவே இல்லை. அரசு இந்த நல்லிணக்கத்துக்கு சவாலாக உள்ள விடயங்களை கையாளுகையில் மாத்திரம் அமைதியாக இருந்து ஆதரிக்கிறது.

  ஆகவே இலங்கையர், மனிதர் என்ற வகையில் இவ்வாறான சிங்கள் பௌத்த மேலாதிக்க தீவீரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல்கொடுப்போம்.

 11. Nadarajah Kuruparan - globaltamilnews

  அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக இன, மத, மொழி வேறுபாடு இன்றி இணைவோம்.

 12. ribnas

  i am not religious extremist

 13. SIHAN NASIR

  DAMBULLA MASJID UDAITTAZU MUSLIM MAKKALLAY AATTIRA PADUTTTA KUDIYA VISAYAM INNSHA ALLAH INDA ULAHATILAYA THANDANAY KEYDAIKKUM

 14. Arifa

  I do not accept.

 15. abdul cader

  palliya eppadiyavathu athe idathil kattavendum

 16. Siyan

  Ahatra vandam

 17. arif hassan

  please stop the violation we Srilankan

 18. al hafil mohamedirshad

  asalamu alaikkum dampulaijil nadantha nekalchiyai vanmaiyaka kandekkerom athil oru kavalikku edemana oruvidayam nadandadu masjith udaitharkal perijosanam attra varthaikal upayohitharkal thambila enra varthai,ethai vedavum pala vedayam nadanthu ullathu,muslim arasiyal vaathikal than ellapathitkaak musilkalai panathitku vettu vedamal allakukavendi musilm urmaikalai venru eduppathatku onru kooduvom.

 19. imthiyas

  அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.

 20. faleel

  ithu murrilum arasiyavathihalin velai averhal than mathathai vaithu inathai thunviduhirarhal nattil mukkima pirashinai uruvahuvath pikkumarhalalthan ella mathamum kooruvathu matha mathangalai mathikkumpady

 21. imam

  இந்த இனாமளுவா செய்த வேலை நல்லதல்ல இது இன்னும் தொடர்ந்தாள் நம் நாட்டில் இன்னும் பல இடங்களில் இதே போல் பிரச்சினய்கள் உருவாகலாம் இந்த பிரச்சினய்க்கு முற்றுப்புள்ளி வெக்கணும் ஆயின் அத அரசாங்கம் தான் செய்யவேனும் இனாமளுவா உட்பட அந்த கும்பலை அரசாங்கம் போலிஸ் கஸ்டடியில் வெயித்து விசாரித்து அவர்களுக்கு தண்டனையி குடுக்கவேனும் அது அரசாங்கத்தால் முடியும் எப்படியென்றால் எல் டி டி அடியோடு அளித்த அரசாங்கம் இதேயி செய்ய முடியும் அரசாங்கம் இலங்கயில் வாழும் எல்லா இனத்தவர்களும் நல்லா இருக்கணும் என்று நினய்க்குமையின் இதேயி செய்யலாம்

 22. mohamed rizwan

  muslimgal porumayanawarhal awarhalin porumeiku kandipa wetri kideikum.intha pikkuvin seyalayum awarin karuthuhalayum oru muslim endra wahayil kadumayaha kandikkuren.aduthu srilanka enbazu singalawarhalukku mattume urithana naadalla azil tamil,muslim,katholikar pondrorhalukkum sama urimey undu enbazei antha therar kandipaha wilangikolla wenum.muslimgal awarhaley mazikkum poluzu awarhalum kandipaha islathey mazikka therinthu kolla wendum.

 23. Sahib

  இலங்கை ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாறவேண்டும் என்றால்,மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரையும்,இனத்துவேஷம் கொண்டோரையும் இலங்கையில் இல்லாமல்லாக்க வேண்டும்.அடுத்தவர் மதத்தை மதித்து,சிங்களம்.தமிழன்,முஸ்லிம,அனைவரும் நாம் இலங்கையன் (ஸ்ரீலங்கன்) என்பதில் ஒன்றுபடவேண்டும்.அப்போதுதான் நாடும் முன்னேறும்.நாமும் முன்னேறுவோம்.

 24. farhan

  அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.

 25. suhail

  idu muttrilum varukkattakka vanmaiyaga kandikka vandiya vidayam, icchayalgalai ulagil ulla saudi,dubai pndra nadugalukka tarivikka vandum, nam muslim arasial vadigal innarattil ottrumaiyaga poradavandum…
  Allah takunda kuliyai inavadam konda anda pikkuvukku valanguvanaga …. ameen…

 26. Hussain A.Meeralebbe

  சகோதரத்துவத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களிடையே வன்முறைகளை கட்டவிழ்ப்போருக்கு அடிப்படைவாத, மேலாதிக்கவாத சிந்தனையுடன் செயற்படுவோருக்கு எதிர்ப்பை தெரியப்படுத்துகிறேன்.முற்றாக அழித்துவிடவேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் என நீங்கள் எண்ணும் விடயங்களுக்காகப் நாங்கள் இணைந்து போராடுவோம். அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.

 27. Suganthi

  காவி உடை தரித்த பௌத்த பிக்குகள் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவது அவர்களின் பௌத்த மதத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 28. I.Amanullah

  Sri lanka is small and beautiful country. it must be handed over as same as to the next generation to live and play! if the government face further silence on the Dampulla mosque affairs it is really dangerous to keep this mother nation peacefully and much difficult to expect from the next generation to keep and maintain peacefully between all citizen of Sri Lanka as a whole family members.

 29. T.H.Tuan Silmi

  பௌத்த தர்மத்தின் படி பௌத்த துறவியொருவரின் நடத்தை தர்மங்களிலிருந்து இந்த பிக்குகளின் செயற்பாடு முற்றிலும் முரணாக காணப்படுகிறது. இவர்கள் பெளத்த தர்மத்துக்கு பாடு படுவதற்கு முன் பெளத்த தர்மத்தில் கூறப்பற்றவற்றை கற்க வேண்டும் ,அவ்வாறு கற்றிருந்தார்களாக இருந்தால் அவர்களின் செயலை எம்மில் பெளத்த தர்மத்தை கற்றவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வந்து பெளத்த தர்மத்தின் படி நியாயபடுத்தட்டும் இது எமது பகிரங்க சவால்.

 30. T.H.Tuan Silmi

  பௌத்த தர்மத்தின் படி பௌத்த துறவியொருவரின் நடத்தை தர்மங்களிலிருந்து இந்த பிக்குகளின் செயற்பாடு முற்றிலும் முரணாக காணப்படுகிறது. இவர்கள் பெளத்த தர்மத்துக்கு பாடு படுவதற்கு முன் பெளத்த தர்மத்தில் கூறப்பற்றவற்றை கற்க வேண்டும் ,அவ்வாறு கற்றிருந்தார்களாக இருந்தால் அவர்களின் செயலை எம்மில் பெளத்த தர்மத்தை கற்றவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வந்து பெளத்த தர்மத்தின் படி நியாயபடுத்தட்டும் இது

 31. M.M.Rahman

  அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.

 32. U.K.A.Rahman

  Don’t create religious extremism in our beloved paradise of the world-Srilanka, enough to us passed thirty years of terrorism/ethnic conflict

 33. Asokan

  “நாம் அந்த பிரிவினரல்ல” literally means “we are not of that faction”. I am not sure why your translator chose such an odd wording. Something like “எங்கள் பெயரிலல்ல” would be a more literal, and IMHO apt, translation of “Not in our name” and “මගේ නාමයෙන් නම් නොවේ”

 34. Dr. D. S. Rajasingham

  Not in my name – never!

 35. Vasuki Jeyasankar

  பௌத்தத்தின் பெயரால் அஹிம்சையும் விட்டுக் கொடுப்பும் சகிப்பு தன்மையும் பெருக வேண்டுமே ஒழிய ஆங்காரமும் அதிகாரமும் அல்ல.

About Groundviews

Groundviews is Sri Lanka's first and international award-winning citizens journalism website uses a range of genres and media to highlight alternative perspectives on governance, human rights, the arts and literature, peacebuilding and other issues.

About Moving Images

Moving Images is a series of stunning audio, video and photographic portraits on facets of life in post-war SriLanka. These high-definition productions, the country’s first, range from portraits of resilience from the war ravaged Jaffna and reflections on theEurasian community by the last surviving Eurasians themselves to fascinating lives in Colombo invisible even to most who live and work in the city.

Groundviews Updates

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

%d bloggers like this: