நாம் அந்த பிரிவினரல்ல: இலங்கையில் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக

உங்களது பெயரை குறிப்பிட்டு வன்முறைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.

என்ன நடந்தது?
ஒரு வாரத்திற்கு முன்பு தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதி இனமலுவே சுமங்கள தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் குழு உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள வன்முறைக் கும்பலொன்று தம்புள்ளயில் அமைந்துள்ள மசூதியொன்றை தாக்கி அழிக்க முன்வந்தது. அவ்வேளை இந்த மசூதி சட்டவிரோதமானது என குற்றம்சாட்டு எழுப்பப்பட்டது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையானது என்பது தெளிவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகிய, இதுவரை யூ டியுப்  ஊடாக உலகமே காணக்கூடிய வகையில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் காட்டப்படுகின்றன வன்முறை மற்றும் அதன் தன்மையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சில பிக்குகள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கை கால்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகள் பிரயோகித்து சத்தமிடுவதும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இன்னுமொரு பிக்கு பள்ளிவாசலின் முன்னால் நின்றவாறு தனது ஆடையை நீக்கிவிட்டு உடலின் மேல் காண்பித்தவாறு சத்தமிடுகின்றார். இந்த அடாவடியான வன்முறை நடவடிக்கையை சிரமதானம் என தெரிவிக்கும் வண. இனமலுவே சுமங்க தேரர், பள்ளிவாசலை இடித்துத்தள்ள அரசு உதவவேண்டும் என கூறும் காட்சியும் வீடியோ காட்சியில் உள்ளது.

புத்த பிக்குகள் மற்றும் வன்முறையாளர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர். அத்துடன், பள்ளிவாசல் மற்றும் இந்து கோவில் தொடர்பாக வண. இனமலுவே சுமங்கள தேரர், ஏனைய பிக்குகள் அவிழித்துவிட்ட இழிவான, இனவாத வார்த்தைப் பிரயோகங்களை வீடியோ ஊடாக பார்ப்பவர்களுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் சிங்கள பௌத்த மேலாதிக்க பேஸ் புக் குழுக்களில் இணைந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிகவும் பயங்கரமானவையாகும்.

இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கழிந்தும் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பிரதான ஊடகங்களினால் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. கருத்துக்கள் தெளிவாக கேட்காத வீடியோக்கள் தொடர்பாக வண. இனமலுவே சுமங்கள தேரர் பி.பி.ஸி. ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் வீடியோக் காட்சிகள் பொய்யானவை என தெரிவித்துள்ளார். நகைப்புக்குரிய விடயம் என்னவெனில், இந்த சம்பவம் தொடர்பான தெளிவான, விளக்கமான வீடியோ காட்சிகள் தேரரின் ஊடக பிரிவினால் நடத்தப்படும் இணையதளத்திலேயே வெளிவந்துள்ளதாகும். ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்டிருந்த அறிக்கையில் “சிறு தவறு நேர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கை பல்சமய, பல் இன மக்களைக் கொண்ட நாடாகும். அத்துடன், அரசமைப்பினதும் மற்றும் அரசின் கொள்கைக்கிணங்க நீண்டகாலமாக நாட்டினுள் இருந்துவரும் சம்பிரதாயங்களைக் கௌரவிக்கும் முகமாக இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் வாழு;ந்துவருகிறது” என அந்த அறிக்கையில் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளைவு என்ன?
தம்புள்ள சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோப் பதிவுகள் ஆகியன உலகம் முழுவதும் பரவியுள்ளன. அவற்றை அழிக்க முடியாது. ஒரு சிறு பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கும் முஸ்லிம் கவுன்ஸில் உட்பட அமைப்புக்கள், இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையாக, அமைதியாக, புத்திசாதுர்யத்துடன் செயற்படவேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தக் கருத்தையே சில தனிநபர்களும் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவத்தினால் கோபமடைந்துள்ள முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட நேரிடலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்டத் தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், சிறு சம்பவம்தானே என்ற நிலையில் மேலோட்டமாக ஆராய்ந்து தற்காலிக தீர்வொன்றை வழங்கினால் இந்த வன்முறை மிக்க மத மேலாதிக்கவாதம் குறுகிய காலத்துக்குள் நாடு பூராகவும் பரவிவிடும் ஆபத்து உள்ளது. இது யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளுக்கு பாரிய சவாலாக இருக்கும். தம்புள்ளயில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி சிங்கள பௌத்த மற்றும் முஸ்லிம் மேலாதிக்கவாதிகள் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்த முயற்சி செய்வர். அவ்வாறு இடம்பெறுமானால் சமூகங்களிடையே அச்சம், பாதுகாப்பற்ற தன்மை மேலோங்க இடமுள்ளது.

எங்களால் என்ன செய்ய முடியும்?
தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதியால் தலைமைதாங்கப்பட்ட பிக்குகள் குழு மற்றும் வன்முறைக் கும்பல் செயற்பட்ட விதம், தகாத வார்த்தைப் பிரயோகம் ஆகியன புத்தர் போதித்துள்ள தர்மங்களுக்கு மாறானதாகும். பௌத்த தர்மத்தின் படி பௌத்த துறவியொருவரின் நடத்தை தர்மங்களிலிருந்து இந்த பிக்குகளின் செயற்பாடு முற்றிலும் முரணாக காணப்பட்டது. சிறு குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வெட்கப்படக்கூடிய இந்த நடவடிக்கைக்காக கவலை தெரிவித்து பலர் இணையதளம் ஊடாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இலங்கை ஊடகங்களும் இந்தச் செய்திக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துவருகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது எம்மிடம் வாய்ப்பொன்று உள்ளது. ஆனால், நேரம் விரைவாக கடந்து செல்கிறது. உங்களுடைய பெயர், நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை ஆங்கிலத்தில், தமிழில், சிங்களத்தில் பதிவுசெய்யுங்கள். சிறு பிரிவினரின் அடாவடித்தனத்திற்கு, இனவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். கீழே உங்களது பெயரை குறிப்பிட்டு வன்முறைகளை கட்டவிழ்ப்போருக்கு அடிப்படைவாத, மேலாதிக்கவாத சிந்தனையுடன் செயற்படுவோருக்கு எதிர்ப்பை தெரியப்படுத்துங்கள்.

முற்றாக அழித்துவிடவேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் என நீங்கள் எண்ணும் விடயங்களுக்காகப் நாங்கள் இணைந்து போராடுவோம். அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.

இங்கு உங்களது பெயரைக் குறிப்பிடுங்கள். ஏனையோருக்கும் இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.

இதன் மூலம் என்ன இடம்பெறும்?
ஒரு மாதத்திற்குப் பின்னர் அனைவரது பெயர் மற்றும் அவர்கள் பதிவு செய்த கருத்துக்களை அச்சிட்டு ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பௌத்த மத சாசன அமைச்சகம் மற்றும் பௌத்த மதம் தொடர்பான திணைக்களம், கிறிஸ்தவ மதம் தொடர்பான திணைக்களம், இந்து மதம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் மதம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.

How to sign up?

Join hundreds of others by adding your name as a comment to this blog post. This is the preferred mode of input, and scrolling through the other comments can help to frame your own thoughts. For those who find this difficult, send us your comment and name using the form below, which we will as quickly as possible, add to the site. As a final resort, you can always email the comment to editors@groundviews.org. Bear in mind however that human resources curating this site are limited, so it may take a while for your comment to appear. Please bear with us.

This campaign ran from 27 April to 31 May 2012. More details here.

Advertisements

About Groundviews

Groundviews is Sri Lanka's first and international award-winning citizens journalism website uses a range of genres and media to highlight alternative perspectives on governance, human rights, the arts and literature, peacebuilding and other issues.

About Moving Images

Moving Images is a series of stunning audio, video and photographic portraits on facets of life in post-war SriLanka. These high-definition productions, the country’s first, range from portraits of resilience from the war ravaged Jaffna and reflections on theEurasian community by the last surviving Eurasians themselves to fascinating lives in Colombo invisible even to most who live and work in the city.

Groundviews Updates